ஆனோல்ட்டுக்கு மணி அணி ஆதரவு?

 


நாளை நடைபெறவுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இமானுவல் ஆனல்ட், மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி ஆதரவளிக்கலாமென தகவல்கள் வெளிவ்ந்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கூட்டத்தில் முதல்வர் தெரிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இமானுவல் ஆனல்ட்   என முடிவெடுக்கப்பட்டதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அறிவித்திருந்தார்.


இதேவேளை நாளைக் காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments