என்மீது பேரன்புகொண்டவர் அம்மா! ரகுமானுக்கு ஆறுதல் கூறிய சீமான்!

பிரபல தமிழ் இயையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவு காரமணாக இன்று இயற்க்கைஎய்தியுள்ளார், அவரிப் இழப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் இரங்களில்,

அன்புச்சகோதரர் ஏ.ஆர்.ரகுமான், அன்புச் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா ஆகியோரது தாயார் கரீமா பேகம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசை மேதைகளுள் ஒருவராகத் திகழ்கிற ஆகச்சிறந்த தமிழ் மகனைப் பெற்றெடுத்த தாயாரின் மறைவு பெரிதும் என்னை வாட்டுகிறது.

அம்மா கரீமா பேகம் அவர்களைச் சந்தித்ததில்லை என்றாலும், அவர் என் மீது பேரன்பு கொண்டிருந்தார் என்பதை சகோதரி ரைஹானா கூறக் கேள்வியுற்று நெகிழ்ந்திருக்கிறேன்.

அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.

அம்மாவுக்கு எனது கண்ணீர்வணக்கம் என தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments