அங்கயன் பெயர்பலகைக்கு ஆப்பு?


மக்களால் தெரிவு செய்யப்பட்ட வலிகிழக்கு பிரதேசசபையினை புறந்தள்ளி அங்கயன் அரங்கேற்ற முற்பட்ட வீதி மைப்பு நாடக பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.

பிரதேசசபையின் அனுமதியின்றி மத்திய அரசு சபைக்கு சொந்தமான வீதியை அபிவிருத்தி செய்ய முற்பட்ட நிலையில் பிரதேச சபை உறுப்பினர்களின் முறைப்பாட்டினை அடுத்து எனது பணிப்பிற்கு அமைய எமது சபையினால் அவ் அபிவிருத்தி திட்ட பெயர்ப்பலகை இன்று காலை அகற்றப்பட்டது.இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பிரதேச சபைக்கு வருகைதந்து எனது வாக்கு மூலத்தினைப் பெற்றனர் என வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றத்திற்கு ஒரு வீதியை புனரமைப்பதாக அரசு நேரடியாக வீதி மைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments