ரஜினிகாந்த் மருத்துவமனையில்

 


நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்தலில் இருந்த அவர் இன்று (25) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

முன்னதாக 22ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றில்லை என தெரியவந்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை எனவும் இரத்த அழுத்த மாறுபாட்டை தவிர வேறெந்த உடல்நல குறைபாடும் இல்லை எனவும் குருதி அழுத்தம் சீரானதும் வீடு திரும்புவார் எனவும் அப்பலோ வைத்தியசாலை நிர்வாகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

No comments