தம்மிகவின் காளி பாணிமருந்திற்கு அனுமதி?



​கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கும் போது அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவிதுள்ளார்.

இந்த ஔடதம் ஏற்கனவே தேசிய மருத்துவத்தால் விஞ்ஞான ரீதியாக உணவு நிரப்பியாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் சுய விருப்பத்தின் பேரில் குறித்த ஔடதத்தை பெற்றுக் கொள்வதை தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments