யாழில் பாடசாலை மாணவனுக்கும் கொரோனா?


யாழ்.மாவட்டத்தில் நேற்று (17) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 5 போில் 19 வயதான மாணவனும் உள்ளடங்கியுள்ளார்.  

இணுவில் மத்திய கல்லூரியில் உயர்தரம் கலைப்பீடத்தில் கல்வி கற்று வந்த இந்த மாணவன், பாடசாலைக்கு விடுமுறை அறிவிக்கும் வரை தினமும் பாடசாலை சென்று வந்துள்ளார்.

 இவரது நண்பர் ஒருவர் சுன்னாகம் வர்த்தக நிலையத்தில் இருந்து கொரோனா தொற்றுடன்  அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, மாணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.

No comments