தொழுகையில் ஈடுபட்ட 50 பேர் சுயதனிமை?முகக்கவசம் அணியாது கம்பளை நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 50 பேரை, சுயதனிமைக்கு  உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழுகையில் ஈடுபட்டோரில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக  அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கம்பளை- நாவலப்பிட்டி வீதி பகுதியில் வசிப்போரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட 25 பேருக்கே சுகாதாரப் பிரிவு அனுமதி வழங்கியுள்ளபோதிலும் விதிமுறைகளை மீறி இவ்வாறு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments