வவுனிக்குளத்தினுள் பாய்ந்தது வான்?


வவுனிக்குள குளக்கட்டு வீதி வழியாக பயணித்தவாகனம் குளத்துள் வீழ்ந்து வாகனத்தில் பயணித்த மூன்று பேரைப்பலியெடுத்து மரணகளமானது வவுனிக்குளம்-
மரணமடைந்தவர்கள் வவுனிக்குளம் குளக்கட்டின் கீழ்(செல்வபுரம்) வசிக்கும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தந்தை அவருடைய இரண்டரை வயது மகள் அயல் வீட்டு பதின் மூன்று வயது சிறுவன் ஆகியோர் ஆவார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகன் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.

உயிரிழந்த தந்தை மற்றும் இரண்டு வயது மகள் ஆகியோரை தேடும்பணிகள் தொடர்கின்றது. பதின் மூன்று வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முன்னைய செய்தி

வவுனிக்குளம் குளக்கட்டில் பயணித்த வாகனம் ஒன்று குளத்தினுள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பயணித்த வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் பயணித்துள்ள வாகனமே விபத்திற்குள்ளாகியுள்ளது. இருவர் மீட்கப்பட்டுள்ளனர் இருவரை தேடும் பணிகள் இடம்பெறுகின்றது


No comments