யாழ்.நகருக்கு மேலும் ஆபத்து?


யாழ்நகரில் இன்றிரவும் அடை மழை தொடர்ந்தால் வெள்ளத்தில் மேலும் பல பகுதிகளகள் மூழ்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இயற்கை அனர்த்தங்களால் யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 22 ஆயிரத்து 622 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனர்த்த நிலைமைகளால் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் தற்போது 21 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 358 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 340 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 93 வீடுகள் முழுமையாகவும், இரண்டாயிரத்து 969 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன- என்றார்.

No comments