பலாலி பூட்டு:சர்வதேச சதியென்கிறார் டக்ளஸ்?


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி சர்வதேச சதியென்கிறார் டக்ளஸ்.
இதன் உண்மைத் தன்மை பற்றி இந்தியத் துணைத் தூதுவரினால் வினவப்பட்டதையடுத்து, உடனடியாக துறைசார் அமைச்சருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விமான நிலையத்தினை மூடுவது தொடர்பாக எந்தவிதமான தீர்மானங்களும் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்பதையும் விரைவில் இந்தியா வழங்கியுள்ள 300 மில்லின் நிதியுதவியை பயன்படுத்தி அடுத்த கட்ட புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்ற தகவலையும் இந்தியத் துணைத் தூதுவருக்கு தெரிவித்துள்ளாராம்.

குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ‘மக்களினால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் போன்ற சில அரசியல்வாதிகள் தங்களுடைய இருப்பை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக யாழ்.ஊடக அமையத்தில் இவ்வாறான செய்திகளை தெரிவித்து மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்றனர்.

எனினும், பலாலி விமான நிலையத்தின் ஊழியர்களை சந்தடியின்றி மத்தள விமான நிலையத்திற்கு மாற்றிய தகவலை முதன்முதலில் கொழும்பு ஆங்கில ஊடகங்களே பகிரங்கப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments