கல்மடு குளத்தில் சடலம் மீட்புகிளிநொச்சி கல்மடு குளத்தில் நேற்றைய தினம் காணாமல் போன இளம்

குடும்பத்தரை இன்று கடற்படையினர் சடலமாக மீட்டுள்ளனர்.

கிளிநொச்சி கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற 63 வயதான மூன்று பிள்ளை தந்தையான சுந்தரம் புலேந்திரன் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்தவர் நேற்று தொழிலுக்கு சென்ற போது காணாமல் போயுள்ளதாக தர்மபுரம் சிறிலங்கா காவல்துறையினர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கல்மடு நகர் பகுதியில் தங்கியிருந்து கல்மடு குளத்துக்கு மீன்பிடி தொழிலுக்குச் சென்ற 63 வயதான மூன்று பிள்ளை தந்தை இன்று அதிகாலை குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

No comments