யாழில் பாதிப்பு:28 ஆயிரத்து 457 பேர் ?



 புரவிப் புயல் தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் 8 ஆயிரத்து 374 குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 457 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர்  கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் வேலணை பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மூவர் காணாமல் போயுள்ளனர்.மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.தற்போது 31 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 1025 குடும்பங்களைச் சேர்ந்த 3058 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

39 வீடுகள் முழுமையாகவும், 1913 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

தொண்டைமானாறு தடுப்பணையின் 8 கதவுகள் திறக்கப்பட்டபோதும் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் நீர் வடிந்தோடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் க.மகேசன் தெரிவித்துள்ளார்.


No comments