வடமாகாண போக்குவரத்திலும் சுத்துமாத்து?


மாகாசணசபையில் ஊடகப்பணியாளர்களை தேடி அதிகாரிகள் அலைந்து திரிய சத்தமின்றி மோசடிகள் பல பெருமெடுப்பில் அரங்கேறிவருகின்றது.

இதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண மோட்டார் போக்கு வரத்து திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளதாக யாழ்ப்பாண நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க பிரதம செயலாளர் குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

சண்டிலிப்பாய் ; பிரதேச செயலகத்தில் பணிபுரியும் மோட்டார் போக்குவரத்து திணைக்களப் பணியாளர் கடந்த கால வருமானத்தினை சுருட்டியமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்பட்ட சந்தேகத்தினையடுத்து குறித்த ஊழியரை உடனடியாக இடமாற்றம் செய்து கணக்காய்விற்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து குறித்த ஊழியரினால் 1.2 மில்லியன் ரூபா பணம் மாகாணத்தில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பணத்தை கையாடியதனை பணியாளரே ஏற்றுக் கோண்டார் என்ற அடிப்படையிலும் இங்கே இந்த தொகைக்கான பணம்தான் கையாடப்பட்டதா என்பதனை கண்டறியும் வகையில் உடனடியாக பிரதம செயலாளரினால் ஓர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைக்கப்பட்டதும் இச் செயலிற்கான ஒழுக்காற்று விசாரணை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


No comments