இந்தியாவுடன் பேசவும்?


மாகாண சபைகள் முறைமை தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், இலங்கை அரசு இந்தியாவுடன் கலந்துரையாடவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும்  இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர அரசிடம் இதனை வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-மாகாண சபைகள் முறைமை தொடர்பில் இலங்கை தனியாக எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. மாகாண சபைகள் முறைமையை வெற்றிகரமாகச் செயற்படுத்துவது குறித்து இந்தியாவுடன் பேசவேண்டும்.

இந்தியாவுடன் கலந்துரையாடாமல் தீர்மானம் எடுப்பது பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.

மாகாண சபைத் தேர்தல் முறைமையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம். புதிய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சாத்தியமானதாக அமையும்-என்றார். 

No comments