இங்கிலாந்து முடக்கநிலை அடுக்குகளை அறிவித்தார் பொறிஸ்


இங்கிலாந்தில் முடக்கநிலை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் நாள் முடிவடையும் என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்:-

எதிர்வரும் டிசம்பர் 2ஆம் நாள் உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அத்தியாவசிமற்ற கடைகளைத் திறக்கலாம்.

2 ஆம் நாள் முடக்கநிலை முடிய உ்ளள நிலையில் மூன்று அடுக்குக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும். அதுவும் எந்ததெந்த இடங்களுக்கு வரும் என்ற விடயங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை தீர்மானிக்கப்படும். குறித்த மூன்றடக்கு விதிமுறைகள் எதிர்வரும் குளிர்காலம் முழுவதும் நீடிக்கும்.

ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒரு முறை விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்பட்டும். கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதை ஆராய்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

மூன்றடுக்கு கட்டுபாட்டில் குழும்பங்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமானவர்களை பூங்காவில் மட்டும் சந்தித்க முடியும்.

மூன்றாம் நிலை கட்டுப்பாடுகள் இருக்கும் இடங்களில் மது அருந்தகங்கள், களியாட்ட இடங்கள் உணவகங்கள் வாடிக்கையாளர்களை அனுமதித்து சேவை வழங்கத் தடை விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் டேக் அவே, டெலிவரி உள்ளிட்டவை தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

இதேநேரம் சூதாட்ட நிலையங்கள், சிறுவர்கள் உட்பகுதி விளையாட்டுத்திடல், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள் என்பன மூடப்பட்டிருக்கும்.

உடற்பயிற்சி நிலையங்கள், சிகையலங்கரிப்பு நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்படும்.

இரண்டாம் நிலை கட்டுப்பாடுகள் இருக்கும் இடங்களில் மது  அருந்தகங்கள், களியாட்ட இடங்கள், உணவங்கள் என்பவற்றில் உள்பகுதிகளில் பரிமாறுதல் நடத்த தடை விதிக்கப்படும். வெளிப்புறத்தில் மட்டும் பரிமாறுதல்கள் செய்ய அனுதிக்கப்படும்.

மிதமான பகுதிகளில் கால்பந்தாட்டங்களை நோில் பார்த்து மகிழ ஆர்வலர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

திருமண நிகழ்வில் 15 பேர் அனுமதிக்கப்படுவார்கள். 6 பேர் பொது இடங்களில் கூடுவது, 10 மணி ஊரடங்கு தளர்த்தப்பட்டு 11 மணி வரை நகர்த்தப்படும்.

என கூறியுள்ளார்.

No comments