கொரோனா:பொய் அறிக்கை தயாரித்த நீதி அமைச்சர்?


அரசியல் அடாவடிகளால் தென்னிலங்கை நாள் தோறும் குழப்பமுற்று வருகின்றது. பஸில் ராஜபக்சவின் வெளிநாட்டு தடை சத்தமின்றி நீக்கப்பட மறுபுறம் தண்டனை விதிக்கப்பட்ட லலித் வீரதுங்க உள்ளிட்டவர்கள் குற்றச்சாட்டு பொய்யென தெரிவித்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த உறவினரை சாதாரணமாக உயிரிழந்ததாக தெரிவித்து மருத்துவ அறிக்கை பெற்றிருந்த நீதி அமைச்சர் அலி சப்ரி தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோரொனா காரணமாக உயிரிழந்த அனைத்து முஸ்லீம்களது உடலங்களும் மத மனுஸ்டானத்திற்கு முரணாக தீயிடப்பட்டே வருகின்றது.

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த தனது உறவினரது மருத்துவ சான்றிதழை நீதி அமைச்சர் மாற்றியெழுதி மத அனுஸ்டான படி புதைத்தமை சர்ச்சைகளை தென்னிலங்கையில் தோற்றுவித்துள்ளது.


No comments