ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை இதுதான்?


ரஷ்யாவின் தயாரிப்பான உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி  ஒன்றின் விலை சர்வதேச சந்தையில் 10 டொலருக்கு குறைவான விலையில் கிடைக்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

இத்தடுப்பூசி 95 விழுக்காடு செயல்திறன் கொண்டது என ரஷ்யா அண்மையில்  அறிவித்திருந்தது.

இதுவரை ஒரு லட்சத்து 17 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளை ரஷ்யா தயாரித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 2 மில்லியனுக்கு அதிகமான தடுப்பூசிகளை தயாரித்து முடிக்க திட்டமிட்டுள்ளது ரஷ்யா.

இது அமெரிக்க தயாரிப்பான பைசர், மாடர்னா தடுப்பூசிகளின் விலையை விட இரண்டு மடங்கு விலை குறைவாகவுள்ளது.

இத் தடுப்பூசி சர்வதேச சந்தைகளில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் கிடைக்கும் என்றும் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் 2 தடுப்பூசிளை போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் ரஷ்யாவின் துணை பிரதமர் டட்யானா கோலிகோவா அறிவித்துள்ளார்.


No comments