பிரான்சில் இடம்பெற்ற வீரமறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

இந்திய- சிறீலங்கா கூட்டுச்சதியால் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட 12

வேங்கைகளினதும், 2 ஆம் லெப். மாலதி அவர்களதும் 33 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், கேணல் பரிதி அவர்களது 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் இன்று 08.11.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பேரிடர் தொடர்பான பிரான்சு அரசின் நடை முறைகளுக்கு அமைய இடம்பெற்றது,

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை மாவீரர் பணிமனையைச் சேர்ந்த திரு. கிருஸ்ணபிள்ளை அவர்கள் ஏற்றி வைத்தார், ஈகைச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு. மகேஸ் அவர்களும், கலை பண்பாட்டுக்கழக துணைப் பொறுப்பாளர் அன்ரனி அவர்களும் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து அனைவரும், சுடர் வணக்கமும், மலர் வணக்கமும் செலுத்தினர்.

நினைவுரையை தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு.சுரேஸ் அவர்கள் ஆற்றியிருந்தார்.

நம்புங்கள் தமிழீழம் நளைபிறக்கும் பாடல் ஒலிபரப்பப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றது.


No comments