சுடலைக்கே கொண்டு செல்கின்றனர்: சஜித்அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்ச்சித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,  புலமையாளர்களின் பாதையை (வியத்மக) பயன்படுத்தி மக்கள் பிரச்சினைகளை தீர்ப்போமென அன்று கூறினர். ஆனால் நா​ங்கள், இடுகாட்டு (சுடுகாடு) பாதையிலே​யே பயணிக்கின்றோம் என்றார்.


“அரசாங்கத்தின் “சௌபாக்கிய நோக்கு” வேலைத்திட்டம், “துர்ப்பாக்கிய நோக்கு” வேலைத்திட்டமாக மாறிவிட்டதெனத் தெரிவித்த அவர், மக்களின் துன்பங்களை பார்ப்பதற்கு அரசாங்கதுக்கு இதயமில்லை. அதனை யார், அபகரித்துச் சென்றுவிட்டனர் எனத் தெரியாது” என்றார்.


ஆட்சிப்பீடமேறிய நான்கு மாதங்களின் பின்னரே கொரோனா வைரஸ் பரவும் நிலை, நாட்டில் ஏற்பட்டதெனத் தெரிவித்த அவர், ஆனால், மக்களுக்கான வேலைத்திட்டங்கள் அதற்கு முன்னரே ஆரம்பிக்கப்படவில்லை என்றார்.


அரசி , பருப்பு, சீனி விலைகள் வர்த்தமானியில் குறைக்கப்பட்டன. ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. கொரோனா வைரஸ் உயிரைப் பறிக்கும். அதேபோன்று, பசியும் மக்களின் உயிரை பறிக்கும். அதனால், பட்டினியை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் வலியுறுத்தினார்.


நடக்கவில்லை. தற்போது கொரோனா உயிரை பறிக்கும் நோயாகும். அதேபோன்று மக்கள் பசியும் உயிரை பறிக்கக் கூடியதே. இதனால் இதனை தடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.

ஆனால் அரசாங்கமோ மக்களின் பசி, துன்பம் தொடர்பாக கண்டுகொள்ளாது இருக்கின்றது. வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு பொருட்களின் விலைகளை குறைப்பதில் அர்த்தமில்லை எனத் தெரிவித்த அவர்,  தொடர்ந்தும் தாமதிக்காது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். 

No comments