சூரியனுக்கும் வந்தது கொரொனா?

 


கொழும்பில் சூரியன் ஊடக நிலையத்தில்; நான்கு ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கொழும்பு ஊடக வட்டாரங்களிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

கொழும்பிலுள்ள உலக வர்த்தக மையத்தில் இயங்கும் ஏபிசி ஊடக வலையமைப்பைச் சேர்ந்த நான்கு ஊழியர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் நேற்று ஒருவர் பாதிக்கப்பட்டமை உறுதியானது எனத் தெரிவித்த கொரோனா தடுப்பு தொடர்பான தேசிய நடவடிக்கை மத்திய நிலையம் இன்று மூவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

ஜிந்துபிட்டி மட்டக்குளியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே பாதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் புத்தூரை சேர்ந்தவரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


No comments