வவுனியா:கூட்டமைப்பு வெற்றி:சுதந்திரக்கட்சி தோல்வி!



வவுனியாவில் சுதந்திரகட்சியின் ஆட்சியில் உள்ள செட்டிகுளம் பிரதேச சபையின் 2021ம் ஆண்டிற்கான வரவுசெலவு தோல்வியடைந்துள்ளது.வாக்களிப்பின் போது ஆதரவாக 07 உறுப்பினர்களும் எதிராக 09 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.இதனிடையே ஒருவர் சமூகமளிக்கவில்லை.

இதனிடையேகூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2021 வரவு செலவுத்திட்டம் இரகசிய வாக்கெடுப்பின் போது ஒரு வாக்கால் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக வரவு செலவு திட்டத்தை இரகசிய வாக்களிப்பிற்கு விட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொதுஜனபெரமுன உறுப்பினர்கள் கோரியிருந்தனர்.ஆனால் கூட்டமைப்பு எதிர்த்திருந்தது.

இதனையடுத்து அதற்கும் வாக்களிப்பு நடத்தப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.

அப்போதே ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக10 வாக்குகளும் கிட்டியது.4 பேர் சமூகமளிக்கவில்லை.

இதனால் வரவு செலவு திட்டம் தப்பி பிழைத்தது.


No comments