வடக்கில் ஏதுமில்லை?

 


யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 241 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.இருந்த போதும் இன்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் புதிதாக தொற்று ஒருவருக்கும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே கோப்பாய் கொரேனா சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை பூரணப்படுத்திய தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தென்னிலங்கையினை சேர்ந்தவர்களே  சிகிச்சையின் பின்னராக வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நாளை புதன்கிழமை முதல் மீண்டும் கொரோனா  தொற்று பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வு கூடம் மருத்துவ பீடத்தில் இருந்து வேறாக்கப்பட்டு, பரிசோதனைகள்; இடம்பெறவுள்ளது.


No comments