மாத்தறை சிறைச்சாலையிலும்?

 


மாத்தறை சிறைச்சாலையிலும் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென,சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த மாதம் 1ஆம் திகதி வெலிக்கட சிறையிலிருந்து மாத்தறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட பெண் கைதியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.


 வெலிக்கட சிறையிலிருந்து மாத்தறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 7 கைதிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இதில் ஒருவருக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை மாத்தறை சிறையில் 25 பெண் கைதிகள் உள்ளடங்களாக 500 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 170 அதிகாரிகள் கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments