கோப்பாய்:தனிமைப்படுத்தல் போடு-நீக்கு?

 


கொழும்பில் இருந்து வந்த அமைச்சர் குழாமுடன் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்றமைக்காக கோப்பாய் பிரதேச செயலாளர் மற்றும் வலி.கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தனிமைப்படுத்தப்பட்டமைப்பு கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றமைக்காக கோப்பாய் பிரதேச செயலாளர் மற்றும் வலி.கிழக்கு தவிசாளர் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக்கு அமைய தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து யாழ்.மாவட்ட செயலரிற்கு கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல் தொடர்பில் முறையிட்டதையடுத்து ஒரு சில மணிநேரத்தில் வடமாகாண சுகாதார பணிமனையின் தலையீட்டால் தனிமைப்படுத்தலில் இருந்து செயலாளர் மற்றும் தவிசாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே துணிச்சலான கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரியின் நடவடிக்கை மக்களிடையே வரவேற்பை தந்துள்ளது.

முற்றாக அரசியல் சூழலில் மாவட்ட செயலகம் தள்ளப்பட்டுள்ள நிலையில் மாவட்ட செயலர் கைப்பொம்மை அரசியலில் தள்ளப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


No comments