சிறீதரனிற்கு அதிகாரம் இல்லை?



கூட்டமைப்பு வசமுள்ள பூநகரி பிரதேசசபையினது நிர்வாக முரண்பாடு தொடர்பில் தலையிட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிற்கு அருகதை இல்லையென வடமாகாண உள்ளுராட்சி ணையாளர் அறிவித்துள்ளார்.

பூநகரி பிரதேச சபையில் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கிடையில்நிலவி வரும் நிர்வாக ரீதியான முரண்பாடுகளை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்களால் மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எழுதிய பதில் கடிதத்தில் குறித்த விடயம் தொடர்பில் தங்களால் குழு நியமிப்பதற்கான அதிகாரங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.



பாராளுமன்ற உறுப்பினரால் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன்,பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசவாளர் க.சுரேன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருந்தது. இக் குழுவினரும் பூநகரி பிரதேச சபையின் நிர்வாக விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்பித்திருந்தனர். எனவே இது தொடர்பில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் 29.10.2020 திகதி கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments