குவாத்தமாலா புயல் மழை! 100 பேர் இறந்திருக்கலாம்??


குவாத்தமாலாவில் ஏற்பட்ட புயல் மழையால் ஆல்டா வெராபாஸின் மத்திய பிராந்தியத்தில் உள்ள கியூஜோவில் சுமார் 100 பேர் இறந்திருக்கலாம் என்று ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டே கூறினார்.

எட்டாவின் பெய்த மழையால் ஏற்பட்ட மண் சரிவுகளால் டஜன் கணக்கான வீடுகள் புதைந்துபோயுள்ளன.

சாலைகள் தடைப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் இதனால் மீட்புப் பணிகள் தடையாக உள்ளது.

இதுவரைக்கும் நாடு தழுவிய ரீதியில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உலங்குவானூர்திகள் போதுமானதாக இல்லாததால் மீட்டுப்பணிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பல பகுதிகளில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஜியாமட்டே கூறினார்.

No comments