மீனவர்களால் கொரோனாவா?சம்மேளனம் கேள்வி!


மீனவர்களால் அவர்கள்; பிடிக்கின்ற மீன்களால் கொரோனா பரவுவதாக பொய் பிரச்சாரங்களை முன்னெடுக்கப்படுவதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்  இலங்கை அரசிடம் நாம் சில கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். அதில் 2018 பெப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் கீழ் எல்லை தாண்டுகின்ற இந்திய இழுவைப்படகுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், 2017 யூலை 25 ம் திகதி கொண்டுவரப்பட்ட இழுவைமடி தடைத்தொழில் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைக்கு கொண்டுவருதல் , தென்பகுதி மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துதல் , மீனவர்களால் கொரோன பரவுகின்றது என்று வதந்திகளை பரப்புவோர்களை இனம்கண்டு சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

போரினால் பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் தங்கள் வலியிலிருந்து மீளாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் . இன்னமும் அவர்கள் உறவினர்களின் வீட்டிலேயே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அத்தோடு மிக முக்கியமாக மீனவர்கள் மூலமாகத்தான் கொரோனா பரவுகிறது என்ற பொய்யான செய்தி சமூகத்தில் பரவிவருகின்றது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறோம் என சுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.

அதிலும் முப்படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீனவர்களது காணிகளும் விடுவிக்கப்படவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். 


No comments