மாமனிதர் ரவிராஜ் நினைவேந்தல்! ஞாபகார்த்த மன்றத்தால் ஏற்பாடு!!மாமனிதர் இரவிராஜ் நினைவேந்தல் நிகழ்வு நாளை செவ்வாய் கிழமை மாமனிதர் நடராஜா இரவிராஜ் ஞாபகார்த்த

மன்றத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் ஆதரவாளர்கள் நண்பர்கள், தென்மராட்சி மக்கள் என ஒன்றிணைந்து, மாமனிதர் நடராஜா இரவிராஜ் ஞாபகார்த்த மன்றம் என்னும் அமைப்பை நிறுவி அதனூடாக இந்த நினைவேந்தல் நிகழ்வை, அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் நாளை நடத்த நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஞாபகார்த்த மன்றத்திற்கு, மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் குடும்பத்தினர், பேராதரவையும் அனுமதியையும் வழங்கியுள்ளார்கள். எதிர்வரும் காலங்களில் மாமனிதர் நடராஜா இரவிராஜ் சார்ந்த நினைவு நிகழ்வுகள், மற்றும் நலனுதவித்திட்டங்களை மாமனிதர் நடராஜா இரவிராஜ் ஞாபகார்த்த மன்றமே முன்னேடுக்கும். இந்த நினைவேந்தல் நிகழ்வு 10.11.2020 அன்று காலை 9.30 மணியளவில், மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் திருவுருவச் சிலைக்கு முன்பதாக (தென்மராட்சி பிரதேச் செயலகம்) இடம்பெறவுள்ளது .

மேற்படி நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சமூகத்தலைவர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர் என்பதுடன் தாங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டு குழு அழைத்துள்ளது.


No comments