கனடாவில் வாள் வெட்டு! 2 போ் பலி! 5 பேர் படுகாயம்


கனடாவில் நடத்தப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 2 போ் பலியாகினா்; 5 போ் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கியூபெக் சிட்டியில், பூதங்களைப் போல் வேடமிட்டுக் கொண்டாடப்படும் பாரம்பரிய ‘ஹாலோவீன்’ திருவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அப்போது, புராதன உடையணிந்திருந்த நபா் நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; 5 போ் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதல் தொடா்பாக சுமாா் 25 வயது மதிக்கத்தக்க நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா். முதல்கட்ட விசாரணையில், இந்தத் தாக்குதலுக்கு தனிப்பட்ட விரோதமே காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரும் தாக்குதலில் காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments