தமிழர்களை மதிக்காத சேதுபதி! முரளிக்கு நன்றி, வணக்கம்!

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில்  விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானதிலிருந்து தமிழகத்தில் பெரும் சர்ச்சை உருவானது. அதிலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அத்தோடு சமூக வலைத்தளத்திலும் உலகம் எங்கும் இருக்கும் தமிழர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் விஜய் சேதுபதி இன்று சந்தித்தார்.

முதல்வரின் வீட்டுக்கு வெளியே செய்தியாளர்கள் ‘800’ பயோபிக் குறித்துக் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஜய் சேதுபதி பதில் அளிக்கையில், “நன்றி வணக்கம் என்ற பதிவு, முடிந்துவிட்டது என்று அர்த்தம். இனிமேல் அதைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்று தெரிவித்தார்.

இதன் பொருள் அவர்விளகைவிட்டதகவே கருதப்படுகிறது, மேலதிக விபரங்களை ஊடகவியலார்கள் வினவியபோது அவாரினால் பதிலளிக்க முடியவில்லை, வழமையாக ஊடகவியலார்களுக்கு மரியாதை கொடுத்து நிதானமாக பதிலளிக்கும் விஜய் சேதுபதியாக தென்படவில்லை என ஊடகவியாளர்கள் கூறியுள்ளனர்.

அத்தோடு அவர் அத் திரைப்படத்திலிருந்து விலகியிருந்தாலும் அவர் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை எனவும் , முரளிதரன் கேட்டதற்கு இணங்கவே அவர் விலகியதாக மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது , எனவே இன்னுமும் விஜய் சேதுபதியின் நடவடிக்கையிலும் அவரின் தெளிவில்லாதபதில்கள் மூலமும் அவர்மீது சந்தேகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

No comments