யாழ்.நிலைமை மாலை தெரியும்?தென்னிலங்கையிலிருந்து யாழுக்கு கொரொனா பரவலாமென்ற அச்சத்தின் மத்தியில் யாழ்ப்பாண குடாநாட்டின் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் விழிப்பாக செயற்படுமாறு இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.


அதேவேளை யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவேண்டியது அவசியம் என யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.


இதனிடையே யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மற்றும் புங்குடுதீவு உள்ளிட்ட தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள சுமார் நூற்றிக்கும் மேற்பட்டவர்களுடைய கொரோனா பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (05) மாலை வெளியாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


இன்றையதினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,


'இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணியதற்காக வடமராட்சி கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை விவகாரத்தால் புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுமார் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுடைய கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.


No comments