பரீட்சைகள் பிற்போடப்பட்டது?



கொரோனா வைரஸ் தொற்றால் கம்பஹா மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜி.சீ. ஈ.உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகிவற்றை ஒத்திவைக்க அரசு தீர்மானித்துள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் அனுஷா கொனுகுல தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் ஏற்பட்டதால் நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன என்றும், பகுதி நேர வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.இந்தநிலையில், பரீட்சைகளை மீள நடத்துவதற்கான திகதிகள் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்படும் என அனுஷா கொனுகுல கூறினார்.இருப்பினும், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைகள் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரொனா தொற்று அசாதாரண நிலைமையையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் கூடுதல் செயலாளர் அனுஷா கோன்குல தெரிவித்ததாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எனினும், இது தொடர்பான இறுதி முடிவு இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் இன்று அறிவித்துள்ளார்.கொரோனா தொற்றையடுத்து, நாட்டின் அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புக்களிற்கு கல்வியமைச்சு முன்னதாக தடை விதித்திருந்தது.இந்த நிலையில், இன்று நடக்கும் கலந்துரையாடல்களை தொடர்ந்து பரீட்சைக்கான இறுதி திகதி இன்று அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், 2021 ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஒத்திவைக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்தது. க.பொ.த. உயர்தர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி திங்கள் முதல் நவம்பர் 06 வரை நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்க

No comments