சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாவை குற்றம் சாட்டும் நோர்வே


நோர்வே நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் மின்னஞ்சல் அமைப்பு மீது சைபர் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா மீது நோர்வே குற்றம் சுமத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு மந்திரி ஈனே எரிக்சன் சொரைட் தெரிவிக்கையில்:- 

இது நாட்டின் ஜனநாயக நிறுவனத்தை பாதிக்கும் ஒரு கடுமையான சம்பவம் என்று கூறினார். 

எங்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில், ரஷ்யா இந்த நடவடிக்கைக்கு பின்னால் நின்றது என்பது எங்கள் மதிப்பீடாகும் என்றார். ஆனால் அவர் எந்தவித ஆதரத்தையும் மேற்கோள்காட்டவில்லை.

நோர்வேயின் குற்றச்சாட்டை முற்று முழுதாக ரஷ்யா நிராகரித்துள்ளது. இது தீவிரமான மற்றும் வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் செயல்  என மாஸ்கோ தெரிவித்துள்ளது.

நோர்வேயின் குற்றச்சாட்டுக்கு ஒஸ்லோவில் உள்ள ரஷ்யாவின் தூதரகம் தெரிவிக்கையில்:- இக்குற்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இக்குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.

ரஷ்ய அரசு இணைய வளங்களுக்கு எதிராக ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான இணைய தாக்குதல்கள் வெளிநாட்டிலிருந்து செய்யப்படுகின்றன என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில், சைபர் தாக்குதலின் போது பல அதிகாரிகளுக்கு சொந்தமான மின்னஞ்சல் கணக்குகள் சமரசம் செய்யப்பட்டதாகவும், சில தகவல்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் நோர்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆகஸ்ட் மாதம், உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் நோர்வே ஒரு ரஷ்ய தூதரை வெளியேற்றியது. ஒரு நோர்வே இராஜதந்திரி சில நாட்களுக்கு பின்னர் வெளியேற்றப்பட்டதன் மூலம் ரஷ்யா பதிலடி கொடுத்தது.

நோர்வே நாடாளுமன்ற வலையமைப்பில் தகவல்களை சேகரித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு ரஷ்ய நாட்டவரை நோர்வே 2018 இல் கைது செய்தது. பின்னர் ஆதாரம் இல்லாததால் அந்த நபர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ஜனவரியில், அதிபர் அங்கேலா மேர்க்கெல் உட்பட நூற்றுக்கணக்கான ஜேர்மன் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

கடந்த ஆண்டு, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குள் ஹேக்கர்கள் நுழைவதற்கு முயன்றதை அடுத்து, ஆஸ்திரேலியாவின் இணைய புலனாய்வு அமைப்பு சீனாவை குற்றம் சாட்டியது. அதனை சீனா மறுத்திருந்தது.

No comments