யாழில் மேலும் ஆறு?யாழ்.மாவட்டத்தில் இன்று (30) இடம்பெற்ற பரிசோதனை நடவடிக்கையின்போது வேலணை, உடுவில், நல்லுார் பகுதிகளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி வேலணை - ஊர்காவற்றுறை பகுதியில் 3 பேருக்கும், யாழ்.நல்லுார் பகுதியில் ஒருவருக்கும், உடுவில் பகுதியில் தாய், மகளுக்குமாக 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவை சேர்ந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுவந்தவர்கள் என பணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 3 பேருக்கும் தொற்று மீள உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

No comments