மகனைத் தேடியலைந்த தாய் உயிரிழந்தார்!காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாயார் ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தை  சேர்ந்த மகாலிங்கம் பத்மாவதி (வயது 70) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.

இவரது மகன் மாகாலிங்கம் உசாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து மீண்டு வந்தவர். பின்னர் இவர் தாயகத்தில் இடம்பெற்ற அனைத்து போராட்டங்களிலும்  தனது மகனை தேடி நீதி கேட்டு கலந்து கொண்டார்.

இந்த நிலையிலே இவர் நேற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

காணாமல் போன உறவுகளை தேடிய நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 77 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  No comments