கல்முனையில் உந்துருளிகள் மற்றும் ஈருறுளிகளுக்குத் தீ வைப்பு

 


கல்முனையில் உந்துருளிகள் மற்றும் ஈருறுளிகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இன்று சனிக்கிழமை அதிகாலை கல்முனை சுனாமி வீட்டுத்திட்டமான பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பில் இனம்தெரியாத நபர்கள் உட்புகுந்து தீயை வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் மூன்று உந்துருளிகள் மற்றும் சிறுவர்களின் 5 ஈருறுளிகளும் எரிந்து நாசமாகியுள்ளன.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


No comments