இத்தாலியில் இறுக்கமாகிறது கொரோனா விதிமுறைகள்


கொரோனா தொற்று நோய்  அதிகரித்து வருவதால் இத்தாலி முடக்க நிலையைத் தவிப்பதற்காக இத்தாலியப் பிரதமர் கியூசெப் கோன்டே புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளார்.

இரவு ஒன்பது மணிக்குப் பின்னர் பொது இடங்களைப் பூட்டுவது தொடர்பிலான அதிகாரங்களை நகர முதல்வர்கள் பெறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

உணவகங்கள் திறக்கும் நேரம் மற்றும் உணவகங்களில் அனுமதிகப்படும் நபர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு வரையறுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இத்தாலி கடந்த இரண்டாவது நாளாக கொரோனா தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை மிக அதிகரித்துள்ளதால் இந்த நகர்வு எடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 11,705 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இந்தொகை சனிக்கிழமை இனம்காணப்பட்ட 10,295 பேரை விட அதிகமாக உள்ளது என்பதால் புதிய பூட்டுதல்கள் குறித்து ஆராயப்பட்டிருந்தது.


No comments