மதுஸ் கொலை:திட்டமிட்ட கொலை?


மதுஸை இலங்கைக்குக் கொண்டுவந்த போது விமான நிலையத்தின் படிக்கட்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படம்.அவரது பாதுகாப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே இரண்டாவதாக இருந்தது.ஆனால் அந்த நேரத்தில் மாதுஸ் அதே படிக்கட்டுகளில் கொல்லப்படுவார் என்று நினைக்கவில்லையென சிங்கள ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

மகாந்துரே மதுஸ் நேற்று செய்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பு மாளிகாவத்தையில் பொலிஸாருக்கும் பாதாள உலக குழுவின் உறுப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போதே அவர் பலியாகியுள்ளார்.இது தொடர்பாக சிங்கள, ஆங்கில பத்திரிகைகளின் காhட்டுன்கள் பலவும் போதைப் பொருள் கடத்தலோடு தொடர்புடைய மூத்த அரசியல்வாதிகள் பலரின் பெயர்களை மகாந்துரே மதுஸ் வெளியிட்டுவிடுவார் என்ற அச்சத்தின் காரணமாகவே, அவர் படுகொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் விஜித கேரத் பாராளுமன்றத்தில் நேற்று கூறியுள்ளார்.

அவரது கொலை திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு நாடகமென அனைத்து தரப்புக்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.


No comments