கொரோனா:இலங்கை அரசு சொல்வது பொய்-மெய்?உண்மையான நிலைமையை அரசாங்கம் மறைத்ததே நாட்டில் கொரோனா வைரஸ் பரவக் காரணம் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மருத்துவர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உண்மையான நிலைமையை மறைத்து, மக்களுக்கு சரியான புரிதல்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனிடையே கொரோனா வைரஸ் பரவல் இன்னும் சமூகத் தொற்றாக மாறியுள்ளனதா என எம்மால் கூற முடியாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற கொரோனா தொடர்பான விவாதத்தில் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சமூகப் பரவலுக்காண அடையாளங்கள் இன்னும் காணப்படவில்லை எனவும் மேலும் தெரிவித்தள்ளார்.

No comments