அம்பாறையில் ஆயுதங்கள் மீட்பு!


அம்பாறை அக்கரைப்பற்று பேருந்து தரிப்பிட வீதியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து ஒரு ரி 56-1 ரக துப்பாக்கி, 30 ரவைகள் மற்றும் ரவைகூடு ஒன்றையும் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர். 

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புலனாய்வுப் பிரிவினர் வெற்றுக் காணி ஒன்றில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.

மீட்ட ஆயுதங்களை புலனாய்வுப் பிரிவினர் காவல்துறையினரிடம் கையளித்துள்ளனர்.


No comments