இது மைத்திரி சிந்தனை:வேலையில்லாமல் சம்பளம்?


இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) 21 பட்டதாரிகளுக்கு எந்தவொரு கடமையும் வழங்கப்படாமல் ஆறு ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.


இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


இந்த 21 பட்டதாரிகளில் சுமார் பத்து பேர் நாரஹென்பிடி தலைமை அலுவலகத்திலும், மீதமுள்ளவர்கள் மற்ற டிப்போக்களிலும் சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த ஊழியர்களில் சிலருக்கு தங்கள் கடமைகளைச் செய்ய கதிரை மேசை கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.


30,000 ஊழியர்களைக் கொண்ட இலங்கை போக்குவரத்து சபையில் சுமார் 49 பட்டதாரிகள் பணிபுரிகின்றனர்.

No comments