போடு:போடு-கோத்தாவா கொக்கா?

 
கோத்தபாயவை கொல்ல சிறையிலிருந்து சதிதிட்டம் தீட்டிய விவகாரத்தில் பாதாள உலக கும்பல் முக்கியஸ்தர்கள் தொடர்ச்சியாக என்கவுண்டர்களில் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கொழும்பு மாளிகாவத்தை வீட்டுவசதி வளாகத்தில் பொலிஸ் மற்றும் பிற சந்தேகத்திற்கிடமான பாதாள உலக நபர்களிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் கிங் மக்கந்துரே மடுஸ் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விசாரணையின் போது 22 கிலோ ஹெராயின், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மோதலில் இரு காவல்துறையினர் காயமடைந்தனர்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments