இந்தியாவிலிருந்து கொரோனாவை கொண்டுவரவில்லை?


இந்தியாவில் இருந்து தமது பணியாளர்கள் நாடு திரும்பும் போது எந்தவொரு நெறிமுறையையும் மீறவில்லை என்றும், இந்தியாவில் இருந்து எந்த பொருட்களையும் மினுவாங்கொட தொழிற்சாலைக்கு கொண்டு வரவில்லை என்று பிராண்டிக்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்ரோஃப் ஒமர்  குறிப்பிட்டுள்ளார். 

மினுவாங்கொட தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து தனது பணியாளர்களுக்கு பிராண்டிக்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்ரோஃப் ஒமர் கடிதம் எழுதியுள்ளார்.

தமது பணியாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்கு தாம்; முன்னுரிமை அளிப்பதால் எந்தவொரு எந்த மட்டத்திலும், எவரும்அலட்சியமாக நடந்து கொண்டார்கள்


என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அஷ்ரோஃப் ஒமர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, தற்போது இடம்பெற்ற சம்பவம் மீண்டும்; நிகழாமல் மாற்றங்களை செய்துக்கொள்ளவேண்டும்.


பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் கொரோனாவுடன்; கண்டறியப்பட்ட முதல் பணியாளர் ஊடகங்களால் நியாயமற்ற பழி மற்றும் அவதூறுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அஷ்ரோஃப் உமர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தம்மை நம்பும் மற்றும் தமது வணிகத்திற்காக தம்மை அர்ப்பணித்த தமது பணியாளர்கள் அனைவருக்கும் தாம் ஆதரவாக இருப்பதாக ஓமர் குறிப்பிட்டுள்ளார்.


தொழிற்சாலை சமூகம் என்பது தங்கள் அமைப்பின் உயிர் இரத்தமாகும், இதற்கு ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தை தாம் பேரழிவிற்கு உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.


தீவிரமான நிலைமை ஒன்றின்போது வெளியில் இருந்து குற்றச்சாட்டுக்களை சுமத்துவது உரிய செயன்முறை அல்ல என்று அவர் கூறியுள்ளார்.


இந்தநிலையில் நடந்து முடிந்த அனுபவத்தை சோதனைக்காலமாக நினைத்து அதனை திரும்பி பார்ப்போம் என்றும் பிராண்டிக்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்ரோஃப் ஒமர் தமது பணியாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments