கடை அடைப்பு: பரீட்சைகளும் பின்போடப்பட்டது?

நாளைய கடை அடைப்பு காரணமாக வடமாகாண கல்வி திணைக்களத்தால் நடத்தப்படும் பரீட்சைகள் நடைபெறுமாவென்ற சந்தேகம்

எழுந்துள்ளது.பொருத்தமான மாற்று திகதியில் பரீட்சைகளை நடத்துவது பற்றி வடக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளைய தினம் நடைபெறவுள்ள கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆசிரிய சங்கம்,மாணவர் சங்கம்,போக்குவரத்து சபைகள் என பல தரப்பும் ஆதரவை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பொது போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டால் மாணவர்கள் வருகை முடங்கிப்போகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை கருத்தில் கொண்டு கபொத சாதாரண தர மாணவர்கள் உள்ளிட்டவர்களது பரீட்சைகளை பொருத்தமான மாற்று திகதியில் நடத்துவது பற்றி வடக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments