கடை அடைப்பிற்கு வணிகர் கழகமும் ஆதரவு!

 


நாளைய கடை அடைப்பிற்கு தனது முழுமையான ஆதரவை யாழ்.வணிகர் கழகம் வழங்க முன்வந்துள்ளது.

அதன் தலைவரும் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தருமான ஜெயசேகரம் இதனை இன்றிரவு உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை காவல்துறை வர்த்தக நிலையங்கள் தோறும் சென்று கடை அடைப்பிற்கு ஆதரவு வழங்கவேண்டாமென கோரி வருகின்றது.

ஆனாலும் கடை அடைப்பிற்கு ஆதரவு வழங்கி வர்த்தக நிலையங்களை மூடுவதென்பது வர்த்தகர்களதும் வணிகர் சங்கத்தினதும் நிலைப்பாடாக இருப்பதாக ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்.வணிகர் கழக முடிவை ஏனைய வர்த்தக சங்கங்களும் கருத்தில் கொண்டு தாமும் ஆதரவை வழங்குமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


No comments