அம்பாறையில் விபத்து! மூவர் படுகாயம்!
அம்பாறை கல்முனை பாண்டிருப்பு பிரதான வீதியில் சிறிய ரக டிப்பர் வாகனமும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொள்கலன் வாகனம் ஒன்றினை முந்திச்செல்ல முயற்சி செய்தபோதே நேற்றிரவு இவ்விபத்து ஏற்பட்டது.
உந்துருளியில் பயணித்த இரு இளைஞர்களும் டிப்பர் வாகனத்தின் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் கல்முனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment