சீன எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் துப்பாக்கி பிரயோகம்!


இந்தியா- சீனாவுக்கு இடையே லடாக் எல்லை மோதலைத் தொடர்ந்து,  எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்து  வருகிறது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்துள்ளன. இரு நாட்டு ராணுவ தளபதிகள் இடையே பல முறை பேசியும், சீன ராணுவம் தனது படைகளை வாபஸ் பெற மறுத்து வருகிறது.

இந்த நிலையில், எல்லை பகுதியான  பாங்கோங் ஏரி பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியது. அதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. அப்போது துப்பாக்கி சூடு நடைபெற்றதாக தகவல் வெளி யானது.

இந்த நிலையில் சீன ராணுவ செய்தி தொடர்பாளர், லாடக் எல்லையைத் தாண்டி பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில் இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ராணுவம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய- சீனா எல்லை பகுதியில் இந்திய தரப்பில் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. சீனா ராணுவம் தான் வானில் துப்பாக்கி சூடு நடத்தியது என தெரிவித்துள்ளது.

No comments