மட்டக்களப்பில் விபத்து! ஒருவர் பலி! மூவர் படுகாயம்!
மட்டக்களப்பு மாவடிவேம்பு வீமன் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் மூவர்
இன்று திங்கட்கிழமை காலை இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் 22 வயதுடைய சித்தாண்டி திருநாவுக்கரவு வீதியைச் சேர்ந்த நாகராசா சதீஸ் உயிரிழந்துள்ளார்.
32 வயதுடைய மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.சுபேந்திரன், 18 வயதுடைய மகேஸ்வரன் தவசீலன் மற்றும் 26 வயதுடைய கருணாகரன் தனுசன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மாவடிவேம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் சுபேந்திரன், தவசீலன ஆகியோர் மேலதிக சிகிற்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment