யாழ்.பல்கலை துணைவேந்தர் சூப்பர் ஸ்டாரா?

 


தனது துணைவேந்தர் பதவிக்காக பலாலி சென்று மொட்டு கட்சி பிரமுகர்கள் சகிதம் யாழ்.மாவட்ட தளபதிக்னு பொன்னாடை போட்ட சிறீசற்குணராசா

தன்னை சுப்ரீமாக்க முற்பட்டு மூக்கடைபடத்தொடங்கியுள்ளார்.

அதிலும் ஈபிடிபி முக்கியஸ்தர் ருசாங்கனையும்  முன்வரிசைக்கு அழைத்து ஊடகங்களிற்கு பாடம் படிப்பித்துள்ளார்.

இதே ரூசாங்கனும் தன்னை ஊடக முக்கிய புள்ளியாக சொல்லியே டக்ளஸ் தரப்புடன் ஒட்டிக்கொண்டது பழைய கதை.

இந்நிலையில் சிறீசற்குணராசாவை கேள்விக்குள்ளாக்கி விமர்சனம் வைத்துள்ள கருத்தியலாளர் ஒருவர் "துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராசா நடாத்திய ஊடக மாநாட்டில் பத்திரிகையாளர்களை முறைகேடாக மிரட்டி அவர்களை அவமானப்படுத்தியது மட்டுமல்ல குற்றம். தன்னுடைய துணைவேந்தர் பதவியின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை மீறியது மட்டுமின்றி தான் ஏற்றுக்கொண்ட Executive position உடைய Job description அவருக்கே தெரியாது என்று பிடி கொடுத்துள்ளார். 

"....துணைவேந்தர்...is ceremonial man" என்கிறார். வேந்தர் பதவிதான் Ceremonial ஆனது. துணைவேந்தர் பதவியல்ல.

அவருடைய உடல் மொழியும் வாய் மொழியும் அவரது ஆணவத்தை மிகத்தெளிவாக வெளிப்படுத்துகிறது. கேள்விகேட்ட பத்திரிகையாளரை தன் வாயில் சுட்டுவிரல் வைத்து ட்றம் பாணியில் அடக்குவதிலிருந்து ட்றம் பத்திரிகையாளர்களை கையாண்டமாதிரி என்று குறிப்பிட்டு சொல்வது வரை ஆணவத்தின் உச்சத்துக்கே போகிறார். யாரோ ஒருவருடைய கைத்தொலைபேசி அழைப்பு சத்தம் கேட்டதும் அதனை நிறுத்துமாறு சொல்கிற அவர் அடுத்த கணமே தன் கைத்தொலைபேசி அழைக்க அதற்கு பதிலளிக்கிறார். அரசனோ இளவரசனோ எக்கணத்திலும் தன்னை அழைக்கும் நிலையில் தனக்கு அரச வம்சத்தோடு தொடர்பு என்பதை பத்திரிகையாளர்களுக்கு காட்ட அவரே ஏற்பாடுசெய்த உத்தியாகவும் இது இருக்கலாம்.

பலாலி ராணுவமுகாமில் பணிபுரியும் லெப்ரினற் தரத்திலுள்ள பெண் ராணுவ டாக்டர்( A Psychologist) உடைய சகோதரர் சக சிங்கள யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ராக்கிங் செய்யப்பட்டதை துணைவேந்தரிடம் தொலைபேசியில் குறிப்பிட்டதுதான் துணைவேந்தரின் அதிரடி நடவடிக்கைக்கு காரணம். குறித்த பெண் லெப்ரினற் மருத்துவர் ராணுவத்தில் ஒரு உளவளவியல் ஆலோசகராக ராணுவத்தில் PTSD பாதிக்கப்பட்டவர்களுக்கு கௌன்சிலிங் செய்திருக்கலாம். அவரது சகோதரனே பாதிக்கப்படுவது எங்கள் எல்லோரதும் கரிசனைக்குரியது ஆனால் துணேவேந்தர் அந்த ஒரு தொலைபேசி அழைப்புக்கு இவ்வளவு நாடகம் போடுவதை குறித்த லெப்ரினற் பெண்ணுக்கே அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனெனில் இலங்கை பல்கலைக்கழகத்தில் தொழில் செய்பவர்களை விட இலங்கை இராணுவத்தில் பணிபுரிகிற உத்தியோகத்தர்களின் ஒழுக்கம் ஒப்பீட்டடிப்படையில் மேலானது. அரசியல் வாதிகளின் பச்சை சிக்னல் இல்லாமல்/ அல்லது ராணுவ கட்டளைத் தளபதிகளின் பச்சை சிக்கனல் இல்லாமல் மிக அரிதான தருணங்களிலேயே(செம்மணி கிருசாந்தி கேஸ்) இலங்கை ராணுவ உத்தியோகத்தர்கள் வன்கொடூரங்களில் ஈடுபட்டுள்ளார்கள். தன்னுடைய துணைவேந்தர் பதவியின் கௌரவமும் மேன்மையும் கூட பேராசிரியர் சற்குணராசாவுக்கு தெரிந்திருக்கவில்லை. Chain of command அடிப்படையில் குறித்த ராணுவ பெண் லெப். டாக்டர் துணைவேந்தரை நேரடியாக தொடர்பு கொள்வது தப்பு. துணைவேந்தருக்கு ராணுவத்துடன் Protocol களை மீறிய தொடர்பு உண்டு என்பதை துணைவேந்தரே போட்டு உடைத்துவிட்டார். ( நட்பு ரீதியில் தொடர்பு கொண்டால் துணைவேந்தர் தனிப்பட்ட ரீதியில் குறித்த பாதிக்கப்பட்ட மாணவனை சந்தித்து ஆறுதல் சொல்லி அவரது உளவளத்தை ஊக்கப்படுத்தலாம்.

No comments