தடை உடைந்தது: முடியுமென நிரூபித்த தரப்புக்கள்!


ஆயுத முனை தடைகளை உடைக்க முடியுமென மீண்டுமொரு முறை தமிழ் தேசம் நிரூபித்துள்ளது.

தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமையான அஞ்சலிக்கும் உரிமையை வலியுறுத்தி, தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள உண்ணாவிரத போராட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.

அரசு வழக்கம் போல இராணுவம், பொலிசார் மற்றும் நிர்வாக இயந்திரங்களை பாவித்து நினைவேந்தல் நிகழ்வுகளையும், அதற்கான உரிமை கோரிக்கையையும் தடுக்க முனைந்தது. எனினும், அரசு தடைகளை மீறி தமிழ் மக்கள் வலுவாக தமது நிலைப்பாட்டை ஒற்றுமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

மாலை 5 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் முடித்து வைக்கப்படும் போது திருமதி சசிகலா ரவிராஜிற்கு பானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து, அனைவருக்கும் பானம் வழங்கப்பட்டது.

தங்களை தாமே புனிதராக்கி தனித்து அரசியல் செய்ய முற்பட்ட சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட்ட களம் புகுந்தமை தெற்கிற்கு முக்கிய செய்தி ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது.


No comments